32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருக்கோவில் நெல்வயல்களில் பன்றிநெல்

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நெற் செய்கையில் சுமார் 500க்கு மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்களில் பன்றி நெல் எனும் களைகள் முளைத்துள்ளதனால் விவசாயிகளுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இப்பன்றி நெல்லானது திருக்கோவில் பிரதேச நெல் வயல்களில் கடந்த காலங்களில் காணப்படுகின்ற போதிலும் இம்முறை அதிகமாக காணப்படுவதாகவும் இதன் காரணமாக தாங்கள் வயல்களை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் திருக்கோவில் தாண்டியடி காஞ்சிரம்குடா சாகாமம் கஞ்சிகுடிச்சாறு தங்கவேலாயுதபுரம் கோம்பக்கரச்சி உற்பட அனைத்து வயல் கண்டங்களிலும் இம்முறை அதிகளவில் பன்றிநெல் களைகளை அவதானிக்க கூடியதாக இருப்பதுடன் அவ்வாறான சில வயல்களில் மாடுகள் மேய்வதையும் அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனை விவசாயிகள் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடமுறைகளை பின்பற்றி வருகின்ற போதிலும் வயல்களில் இப்பன்றி நெல் களைகளை முற்றாக அழிக்க முடியாது இருப்பதாகவும் இதனால் ஒவ்வொரு வருடமும் தமக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles