திருக்கோவில் விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கௌரவிப்பு நிகழ்வு

0
236

அம்பாறை திருக்கோவில் விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினரால் பரீட்சைகளில் உயர் சித்தி பெற்று சாதனையீட்டிய 19 மாணவ மாணவிகள் பாராட்டிக்
கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீP சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய தலைவர் கே.நவசிவாயம் தலைமையில் இடம்பெற்றது.கடந்த ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் உயர் சித்தியடைந்து மருத்தவப் பீட மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி இருந்த மாணவிகள் மற்றும் 5ஆம் ஆண்டு பலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்திபெற்ற மாணவ மாணவிகளே கௌரவிக்கப்பட்டனர்.


நிகவில் அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பானர் ஆர்.உயதகுமார், சித்தி விநாயகர் ஆலய செயலாளர் என்.ருசாந்தன் பொருளாளர் எஸ்.சுதாகர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.