திருநங்கைகளின் வலியை பேசும் பில்டர் கோல்ட்

0
277

திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படம் பில்டர் கோல்ட். இதனை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். விஜயபாஸ்கர் இயக்கி நடித்திருக்கிறார். ஆர்.எம்.மனு தயாரித்திருக்கிறார். பரணிகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹியூமர் எழிலன் இசை அமைத்துள்ளார்.

பொதுவாக திரைப்படங்களில் திருநங்கைகளின் வாழ்க்கை முழுமையாக காட்டப்படுவதில்லை. ஆனால் இந்தப் படம் முழுக்க முழுக்க திருநங்கைளின் வாழ்க்கையையும், வலியையும் சொல்லும் படம். நானும், சண்முகம் என்பவரும் திருநங்கையாக நடித்துள்ளோம், எங்களுடன் தோராஸ்ரீ என்ற திருநங்கையும் நடித்திருக்கிறார்.

திருநங்ககைளுக்கு எந்த சலுகையும் வேண்டாம், அந்தஸ்தும் வேண்டாம். அவர்களை அவர்கள் பாணியில் அவர்கள் உலகத்தில் வாழ விட்டால் போதும் என்பதை சொல்லும் படம். என்றார்.