திருமணமான பெண்ணுடன் சுடுகாட்டில் உல்லாசம் இருந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் கைலாவன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மயானத்தில், பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) நிர்வாகி ஒருவர், பெண்ணுடன் காரில் உல்லாசமாக இருந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பா.ஜ.க நிர்வாகி பெயர் ராகுல் வால்மீகி என்று தெரிய வந்துள்ளது. இவர் பா.ஜ.க.வின் பட்டியல் அணி மாவட்ட செயலாளராக பொறுப்பில் உள்ளார்.
ராகுல் வால்மீகியுடன் காரில் உல்லாசத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் காருக்குள் அரை நிர்வாண நிலையில் உல்லாசத்தில் ஈடுபட்டபோது, அந்த கிராம மக்களே கையும் களவுமாக பிடித்ததுடன், அவர்களை வீடியோவும் எடுத்துள்ளனர். சுடுகாட்டு பகுதிக்கு யாருமே வர மாட்டார்கள் என்று நினைத்து, பா.ஜ.க நிர்வாகி, அங்கு பெண்ணை அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
கிராம மக்கள் தங்களை சூழ்ந்து கொண்டதை அவர்கள் 2 பேருமே எதிர்பார்க்கவில்லை.. உடனே அந்த பெண், துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டார். காருக்குள் இருந்த ராகுல் வால்மீகி, கிராம மக்களிடம் மன்னித்து விடுங்கள் என்று அங்கிருந்து ஓட்டம் பிடிக்க முயன்றார்.ஆனால் பொதுமக்கள் அவர்களை விடவில்லை. ராகுல் வால்மீகி கெஞ்சியதையும் சேர்த்து வீடியோ எடுத்துவிட்டார்கள்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கட்சி மேலிடம் ராகுல் வால்மீகியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. ஆனால், இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை என்றும், அப்படி யாராவது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னாள் நிர்வாகி மனோகர்லால் தாக்கர். இவர் டெல்லி – மும்பை விரைவுச்சாலையில், பெண் ஒருவருடன் ரோடு ஓரத்தில் உல்லாசமாக ஈடுபட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.