திருமண முறிவுகளால் சிதைந்து போகும் குடும்ப கட்டமைப்புக்களைப் பாதுகாத்தல்:சாய்ந்தமருதில் விழிப்புணர்வு

0
88

‘அதிகரித்து வரும் திருமண முறிவுகளும் சிதைந்து போகும் குடும்ப கட்டமைப்புகளும்’ என்ற தொனிப்பொருளில் அம்பாறை சாய்ந்தமருது குவாஸி நீதிமன்ற நீதிபதி ஆதம்பாவா
தலைமையில் விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பிறாவின் நெறிப்படுத்தலில் மகளிர் சங்க உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு
சாய்ந்தமருது குவாஸி நீதிமன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
விசேட உரையினை முஸ்லீம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணியின் பிரதிநிதிகளான ஹபிலா மற்றும் ஹஸ்ஸானா உட்பட எச்.ஈ.ஓ நிறுவனத்தின் பிரதிநிதிகளாக வை.றினோஸா,
எம்.எம் றீபா உள்ளிட்டோர் வழங்கினர்.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பெருங் குற்றப் பொறுப்பதிகாரியும் பதில் பொறுப்பதிகாரியுமான றவூப், சாய்ந்தமருது பிரதேச செயலக மகளீர் அபிவிருத்தி கள உத்தியோகத்தராக
கடமை புரியும் ஏ.அபிரா, பிரதேச அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ஐ.ஜாபீர் இதில் கலந்துகொண்டனர்.