திருகோணமலை எகேட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயத்தில் சுற்றுச் சூழல் மற்றும் தனி நபர் சகாதாரம் பற்றிய வதிவிட
செயலமர்வு நடாத்தப்பட்டது.
எகெட் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்பணி.போல் றொபின்சன் அடிகளார் தலைமையில் செயலமர்வு இடம்பெற்றது. 350க்கும் மேற்பட்டவர்கள் செயலமர்வில் பங்கேற்றனர்.