கிழக்கு மாகாண கல்வித்திணைக்களமும், யூலிட் நிறுவனமும் இணைந்து க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர்தரம் ஆகியவற்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொழிலுக்கான திறவுகோல் எனும் தொனிப்பொருளில் தொழில் வழிகாட்டல் ஆலோசணைக் கருத்தரங்குகளை நடத்தியது.
இன்று பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இக் கருத்தரங்கினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பட்டிருப்பு வலயக்கல்விப் பணிமனையின் நிர்வாகப்பிரிவின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தலைமையில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திறன் வழிகாட்டல், யூலிட் நிறுவனப் பணிப்பாளர் நிரோச சமிந்த ஹப்பு ஆராச்சி கலந்து கொண்டிருந்தார். அத்துடன் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையின் முகாமைத்துவ பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.றியாசா, அதிபர் க.செல்வராசா, வவழிகாட்டல் ஆலோசணை சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பி.துஷ்ஷயந்தன் உட்பட ஆசிரியர்கள், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இங்கு மாணவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறான கற்கை நெறிகளை தெரிவு செய்யவேண்டும், தொழில் வழிகாட்டல் ஆலோசணைகளை எங்கு பெற்றுக்கொள்ளலாம், விரும்பிய கல்வி துறையை, தொழிலை தெரிவு செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள், மாணவர்கள் எதிர்நோக்கும் உடல், உள ரீதியான பிரச்சினைகளுக்குhன தீர்வுகள் ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது