கொழும்பில் பல பில்லியன் ரூபா நிதி மோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் ராஜபக்ச அரசாங்கத்தில் உள்ள பெருமளவானோர் நேரடித் தொடர்பு கொண்டுள்ளனர் என முன்னாள் இராணுவ அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இணைய சேவையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். திலினி பிரியமாலி தற்போதைய அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடன் தனது நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, பலர் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை இந்த பெண்ணிடமே முதலீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பணத்தை முதலீடு செய்த பல அரசியல்வாதிகள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை, திலினி பிரியமாலியுடன் தொடர்பில் இருந்த நடிகை மற்றும் அறிவிப்பாளர் உட்பட பலர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.