தீப்பந்தப் போராட்டம்!

0
4

கறுப்பு ஜூலை நினைவேந்தலையொட்டி யாழ். வடமராட்சி, நெல்லியடி பஸ் நிலையம் முன்பாகத் தீப்பந்தப் போராட்டம் நடைபெற்றது.

நேற்று (27) இரவு 7 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையில் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.