தீர்வை வரியின்றி நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட் மற்றும் பீடியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஜயபுர பிரதேசத்தில், தீர்வை வரியின்றி இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 1,480 சிகரெட்டுக்கள் மற்றும் 33,000 பீடியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெலிகோபொல பிரதேசத்தை சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.