எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு தீயினால் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பண்டாரவளை இடர்முகாமைத்துவ மையத்தின் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த தீப்பரவல் காரணமாக சுமார் 15 ஏக்கர் வனப்பகுதி பாதிப்படைந்துள்ளது.
பதுளை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் 16 மாணவர்கள் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள மக்களால் அவர்கள் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த 16 பேரும் இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்.