விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
துன்னாலை மத்தி, கோயில் கடவையைச் சேர்ந்த சங்கர் சஞ்ஜீவன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த முதலாம் திகதி இரவு மோட்டார் சைக்கிள் பழக முயன்ற போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தலைக்கவசம் அணியாத நிலையில் படுகாயமடைந்த இளைஞர் மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டார்-