துபாயில் IMF ற்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்!

0
5

பாகிஸ்தானின் பொருளாதாரம் நீண்டகாலத்தின் பின்னர் ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.பல்வேறு வகையில் இதற்கு உதவிய சர்வதேச நாணய நிதியத்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டின் போது, ​​சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இதன்போது நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் பாகிஸ்தான் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.