துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ள அக்போ யானை, விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காயமடைந்துள்ள அக்போ யானையின் காலில், சிறப்பு மருத்துவக் குழுவினர் நேற்று எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர்.
குறித்த யானை இடது காலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அனுராதபுரத்திற்குப் பொறுப்பான வனவிலங்கு கால்நடை மருத்துவர் சந்தன ஜயசிங்கவிடம் கடந்த ஜூன் 12ஆம் திகதி முதல் சிகிச்சை பெற்று வருகின்றது.
கால்நடை மருத்துவ இயக்குநர் – வைத்தியர் தாரக பிரசாத் உள்ளிட்ட சிறப்பு மருத்துவக் குழுவினர், நேற்று அக்போ யானையை தூங்கவைத்து காயமடைந்த யானையின் காலில் எக்ஸ்ரே பரிசோதனை செய்ததுடன், காலில் ஏற்பட்ட காயங்களுக்கு தேவையான சிகிச்சையையும் வழங்கினர்.