கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி கடுவெல வெலிவிட்ட பகுதியில் உள்ள கடையொன்றில் சிம் அட்டை ஒன்றை வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டார்.
அதற்கு முந்தையநாள் 18 ஆம் திகதி துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரும் ,இதற்குத் திட்டங்களை வகுத்ததாகத் தெரிவிக்கப்படும் இஷாரா செவ்வந்தியும் வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர்.இதன்போதே குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் சிம் அட்டை கொள்வனவில் இஷாரா செவ்வந்தி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்செயலை மேற்கொள்வதற்காகத் தொடர்பாடல் நடவடிக்கையை முன்னெடுக்க அவர் இந்த சிம் அட்டையைப் பயன்படுத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.