துருக்கியில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் 32 பேர் பலி!

0
124

துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணமான காசியான்டெப் பகுதியில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் தீயணைப்புப் படையினர் மருத்துவக் குழுக்கள் மற்றும் பிற குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மற்றொரு பேருந்து மோதியது.
இதையடுத்து இரு விபத்துக்களிலும் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கிய சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார். இதில் அவசர கால பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் பலியாகினர். காயமடைந்த 29 பேரில் எட்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.