துருக்கி – சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த திங்கட்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. இன்று அதிகாலை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் துருக்கியில் 29 ஆயிரத்து 605 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், சிரியாவில் 3 ஆயிரத்து 574 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா கணித்துள்ளது.