துவிச்சக்கர வண்டிகளின் விற்பனை சடுதியாக வீழ்ச்சி

0
190

துவிச்சக்கர வண்டிகளின் விற்பனை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக, துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார். துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அதன் விலைகளும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்து காணப்பட்டது. இதன்காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்திருந்தததுடன் தட்டுப்பாடுகளும் ஏற்பட்டிருந்தன. தட்டுப்பாடு இன்றி எரிபொருள் கிடைக்கின்றமையால் துவிச்சக்கர வண்டிகளின் பயன்பாடு குறைடைந்துள்ளதாக
துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.