25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

துஷான் குணவர்தன வெளிநாடு செல்ல தடை!

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தனவுக்கு வெளிநாடு
செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
துஷான் குணவர்தன நேற்றுமுன்தினம் வணிக நோக்கங்களுக்காக அமெரிக்கா செல்ல முயன்றபோது,
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
வெலிசர நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதால் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்க முடியாது என்று குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இதன்போது அவரிடம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்ட துஷான் குணவர்தன, வழக்கில்
சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா சதொச நிறுவனத்துடன் தொடர்புடைய பூண்டு மோசடி மற்றும் எரிவாயு சிலிண்டர் தொடர்பான
வெடிப்பு விவகாரம் காரணமாக துஷான் குணவர்தன பிரபல்யமானவர்.
லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்று வந்த பாரிய பூண்டு மோசடியை இவர் அம்பலப்படுத்தியிருந்தார்.
அத்துடன் நாடு முழுவதிலும் இருந்து எரிவாயு தொடர்பான வெடிப்புகள் பல சம்பவங்களுக்கு முன்னர் சில உள்நாட்டு எரிவாயு
சிலிண்டர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் முன்னர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles