தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட தீவிபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

0
122

தென்னாபிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான ஜொகானஸ்பேர்கில் உள்ள ஐந்துமாடிக் கட்டடத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வடைந்துள்ளது.

தீவிபத்து குறித்து தீயணைப்புத் படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, விரைந்துசென்ற தீயணைப்புப் படை வீரர்கள் பல மணிநேரத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

தீவிபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதுவரையில் கட்டடத்திலிருந்து 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.