ஆப்கானிஸ்தான் – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த ஆட்டத்தில் இலகு வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி தொடரில் ஆறுதல் வெற்றிபெற ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற அடிப்படையில் தொடரை வென்று முதல் முறையாக தென்னாபிரிக்காவுடன் தொடரை வென்ற வரலாற்று சாதனையை படைத்தது.
மூன்றாவது போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 169 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்கா 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து 7 விக்கெட்களினால் வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ரஹ்மானுல்லா குர்பாசுக்கு வழங்கப்பட்டது.