தென்னாபிரிக்கா அசத்தல் வெற்றி! பாகிஸ்தான் பரிதாபம்!!

0
27

பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது ரி – 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது ரி – 20 போட்டியில் பாகிஸ்தான் எடுத்த 206 ஓட்டங்கள் இலக்கை தென்னாபிரிக்க அணி விரட்டி அடித்து 19. 3 ஓவர்களில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அத்தோடு, 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0 என்று தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது

2022இற்குப் பிறகு தென்னாபிரிக்கா வெல்லும் முதல் இருதரப்பு ரி – 20 தொடர் இதுவே. ரீசா ஹென்றிக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் இப்போதுதான் அவர் தன் முதல் ரி – 20 சதத்தை பதிவு செய்துள்ளார்.