தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில்,முதன் முறையாக தைப்பொங்கல் விழா

0
32

தைப்பொங்கல் விழா முதன் முறையாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக ஊழியர் சங்க காரியாலயத்தில்
நேற்றைய தினம் நடைபெற்றது. ஊழியர் சங்க தலைவர் சி.எம். அஹமட் முனாஸ் தலைமையில் பல்கலைக்கழக இந்து ஊழியர்கள் மற்றும் ஏனைய சமயங்களைச் சார்ந்த ஊழியர்கள் பங்குகொண்டிருந்த இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் அழைக்கப்பட்டிருந்தார். கௌரவ அதிதிகளாக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம்.முஸ்தபா, நூலகர் எம்.எம். றிபாவுடீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பல்கலைக்ககழகத்தில் பணியாற்றும் தமிழ்,முஸ்லிம்,சிங்கள ஊழியர்களுக்குடையில் பரஸ்பரம், சகோதரத்துவம், நல்லிணக்கம் போன்றவற்றை கட்டியெழுப்பும் நோக்கில் தைப்பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.