தெற்கு காஸாவில் நீடிக்கும் இஸ்ரேலியத் தாக்குதல்

0
142

தெற்கு காஸாவில் தாக்குதலை நீடித்து வரும் இஸ்ரேல், கான் யூனிஸ் நகரிலும், அதைச் சுற்றியும் உள்ள மேலும் சில பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என நேற்று உத்தரவிட்டுள்ளது.

தெற்கு காஸாவை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை போா் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், காஸாவை இஸ்ரேல் மீண்டும் கடுமையாகத் தாக்கி வருவதுடன், தற்போது தெற்கு காஸாவையும் தாக்கத் தொடங்கியுள்ளது.

இதையொட்டி தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகரிலும், அதைச் சுற்றியும் உள்ள மேலும் சில பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது.

கான் யூனிஸ் நகர மக்கள், தங்களை தெற்கு நோக்கி ரஃபா நகருக்கு அல்லது தென்மேற்கு கடலோரப் பகுதிக்குச் செல்லுமாறு விமானங்களில் இருந்து இஸ்ரேல் ராணுவம் துண்டு பிரசுரங்களை வீசியதாக  தெரிவித்துள்ளனர்.