நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் இந்திக்க வீரசிங்க கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், டிசம்பர் மாதத்தில் இதன் உச்சநிலையினை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் 9 ஆயிரம் டெங்கு நோயாளர்களும், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 5 ஆயிரத்து 106 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என வைத்தியர் இந்திக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்படுகின்றனர்.
அதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது எனவும்,
மேல் மாகாணம் தவிர காலி, பதுளை, யாழ்ப்பாணம், குருணாகல், கண்டி, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளிலும் கணிசமான டெங்கு தொற்றாளர்கள் பதிவாகுவதாகவும் வைத்தியர் இந்திக வீரசிங்க கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த வருடத்தில் நாட்டில் 25 ஆயிரத்து 900க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 19 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.