தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக தொழிற் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கல்

0
160

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின், கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் ஊடாக, தொழிற் பயிற்சியை நிறைவு செய்த ஒரு தொகுதி பயிலுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வு, கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் எஸ்.சுபாஸ் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில், பரிசோதகர்களான குகன், எஸ்.கிரிசாந், எம்.எஸ்.சபாரி சபீக், ரேகன், என்.அபிமன், திருமதி பி.சர்மிந்தா ஆகியோர் கலந்துகொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்தில், தொழில் தேடுகின்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழிற் பயிற்சியை வழங்குகின்ற மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற சான்றிதழை வழங்குகின்ற நிறுவனமாக, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை விளங்குகின்றது.