அனைத்து பீடி சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி நேற்று (02) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த வரி, 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.