தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவித்து, பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில், இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு, புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் ச.கிருஷாந்தன் தலைமையில், இன்று காலை 10.45 மணியளவில் நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட, கட்டுரை, வாசிப்பு, நுண்ணறிவு, பேச்சு போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள், அதிதிகளால், சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தரம் 1, 2, 3 மாணவர்களிடையே வாசிப்பு போட்டியும்,
தரம் 4,5 மாணவர்களிடையே நுண்ணறிவு, பொது விவேக போட்டியும்,
தரம் 6,7 மாணவர்களிடையே பேச்சு போட்டியும்,
தரம் 8, 9, 10, 11 மாணவர்களிடையே கட்டுரை போட்டியும் நடத்தப்பட்டன.
இவ்வாறு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி வெற்ற மாணவர்கள், இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அறிவொளி புத்தகசாலையினால், புதுக்குடியிருப்பு பிரதேச சபை நூலகத்திற்கென, ஒரு தொகுதி நூல்கள், பிரதேச சபை செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ச.ஜசிந்தன்,புதுக்குடியிருப்பு கோட்டக் கல்வி அதிகாரி சி.பாஸ்கரன்,
ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் வித்தியாலய அதிபர் திருமதி வெ.நித்தியகலா,
ஒலுமடு தமிழ் வித்தியாலய அதிபர் ஜெ.ஜெகதீபன், ஓய்வுநிலை கோட்டக் கல்வி அதிகாரி சி.சுப்ரமணியேஸ்வரன், ஓய்வுநிலை அதிபர் இ.செல்வநாயகம்,
துணுக்காய் பிரதேச சபை செயலாளர் அ.பாலகிருபன், மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளர் செ.செல்வகுமார், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.