தேசிய விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் விசேட முயற்சி

0
98

நாட்டின் தேசிய விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் முகமாக அக்கரைப்பற்று ஆலிம்நகர் விவசாய விரிவாக்கல் நிலயத்திற்குட்பட்ட நெற்காணிகளில் மூன்றாவது போக பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இதற்கமைவாக ஆலிம்நகர் விவசாய விரிவாக்க நிலையப் பொறுப்பு விவசாயப் போதனாசிரியர் ஏ.ஜி.பிர்னாஸ் ஹரீஸ் தலைமையில் இன்று இலுக்குச்சேனைப்
பகுதியில் வைபவரீதியான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.


நிகழ்வில் பிரதமஅதிதியாக அம்பாறைமாவட்டவிவசாயப் பணிப்பாளர் துசார கலந்துகொண்டதோடு, மறுவயற்பயிர்களுக்கான பாடவிதான உத்தியோகத்தர் ஜனாப். எஸ்.எச்.ஏ.நிஹார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


அக்கரைப்பற்றின் முன்னோடி விவசாயிகளில் ஒருவரான ஜனாப். தஸ்லீம் என்பவரின்; வயற்காணிகளில் உழுந்து, பாசிப் பயறு மற்றும் கௌபி ஆகியன பாரிய நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது.


மூன்றாவது போகபயிர்ச் செய்கைகளில் ஆர்வமுள்ள விவசாயிகள் பலர் கலந்துகொண்டதுடன் துறைசார்ந்தவர்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளைக் கேட்டறிந்து பயனடைந்தனர்.