தேர்தலை தாமதப்படுத்த ஆதரவில்லை- நிமல் புஞ்சிஹேவா

0
99

உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை, தெரிவு செய்யப்படாத அதிகாரிகளுக்கு வழங்க இடமளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல்களைத் தாமதப்படுத்த எல்லை நிர்ணய குழுவைப் பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். கம்பஹாவில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தேர்தலை தாமதப்படுத்த ஆதரவளிக்காது, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் விரைவில் கோரப்படும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.