மே தின நிகழ்வுகளில் ஒவ்வொரு பிரதான வேட்பாளரும் தங்களின் செல்வாக்கைக் காண்பிக்க முயன்றிருக்கின்றனர்.
இந்த மாதத்திலிருந்து தேர்தல் களம் சூடுபிடிக்கும். தேர்தல் நெருங்கும்போது பல்வேறு விடயங்கள் பேசுபொருளாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இதில் பிரதானமானது. கர்தினால் மல்கம் ரஞ்சித் – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தீர்வைத் தராத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாமென்று பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். இதன்மூலம் அவர் நேரடியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டாமென்றே கூறியி ருக்கிறார் என்று கருதலாம் – ஏனெனில், ராஜபக்ஷக்களின் ஆதரவுடன்தான் ரணில் அதிகாரத்துக்கு வந்தார். ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தமது ஆட்சியில் தீர்வு வழக்கப்படுமென்று தேசிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கூறிவருகின்றன.
அவற்றின் வேட்பாளர்களான அநுரகுமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் கூறிவருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் மல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலாக்க முயற்சிக் கிறாரென சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர் – அவற்றுக்குப் பதில ளிக்கும் வகையிலேயே தற்போது இவ்வாறானதோர் அறி விப்பை அவர் வெளியிட்டிருக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலவாறான குற்றச்சாட்டுகளும் சர்சைக்குரிய கருத்துகளும் உண்டு. ஒரு சாரார் இது ஓர் உள்நாட்டு சதியென்று கூறிவருகின்ற நிலையில் இன் னொருபுறம் இது முற்றிலும் வெளிநாட்டு பயங்கரவாதத் தாக்குதல் என்று இன்னொரு சாரார் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக சனல்-4 காணொலி வெளியானதைத் தொடர்ந்து சாதாரண மக்கள் மத்தியில் இது ஓர் உள்நாட்டு சதி என்றவாறே புரிந்து கொள்கின்றனர்.
அதிகாரத்துக்கு வரவேண்டும் என்னும் ஆசையால் சிலர் அப்பாவி மக்களை பலியிட்டிருக்கின்றனர் – என்று கத்தோலிக்க மக்கள் புரிந்துகொள்வர். அவ்வாறானதொரு பின்னணியில் ராஜபக்ஷக்கள் மற்றும் ராஜபக்ஷக்களுடன் கூட்டு வைத்திருப்பவர்களை அவர்கள் நிச்சயம் வெறுப்பார்கள். ஏனெனில், இது ஓர்
உணர்வுபூர்வமான விடயம். ரணில் கெட்டித்தனமானவர் என்பது அறிவுபூர்வமான ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால், உணர்பூர்வமாக சிந்திப்பவர்கள் ராஜ பக்ஷவை எதிர்க்கும் எண்ணத்துக்கே முக்கியத்துவமளிப்பர் – ஒருவேளை ராஜபக்ஷவுடன் ரணில் கூட்டு வைத்துக் கொண் டால் அவரையும் எதிர்ப்பார்கள். இவ்வாறானதொரு பின்புலத் தில் மல்கம் ரஞ்சித்தின் அறிவிப்புக்கு ஒரு பெறுமதி உண்டு.
தேர்தல் நெருங்கும்போது, இந்த விவகாரம் இன்னும் கொதி நிலை அடையலாம். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் ஒருவரை ஒருவர் எவ்வாறு மக்கள் மத்தியில் பலவீனப்படுத்த லாம் என்பதிலேயே கவனம் செலுத்துவர். ஒரு சொற் சமராகவே தேர்தல்களம் காட்சியளிக்கும். அவ்வாறானதொரு பிரசாரத் தின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலே பிரதான பேசு பொருளாக இருக்கும்.
இந்தத் தென்னிங்கை தேர்தல் ஆட்டத்துக்குள் தமிழர்களுக்கு என்ன வேலை? இந்தக் கேள்வி தொடர்பில்தான் தமிழ் அரசியல் சமூகம் சிந்திக்க வேண்டும்.