தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றத்துக்காக இருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் விதிமுறைகள் மீறி, சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த வேளையில் கறுவாத்தோட்ட காவல்துறையினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கொழும்பு நீதவான் திலின கமகே முன்னிலையில் இருவருக்கும் தலா 1500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.