தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தில் நேற்று தீர்மானிக்கப்பட்டது. எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பிற்கு மத்தியில், தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.