தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டம் அமுலாக்கும் திட்டமில்லை.

0
53

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை எனவும் சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமுலில் உள்ளதாகவும், தேவைப்பட்டால் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல் காலத்தில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் எனவும் தேவைப்பட்டால்
பொலிஸாருக்கு ஆதரவாக முப்படையினரும் தயார் நிலையில் உள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்தார்.