தேவை நாடும் மகளிர் அமைப்பால், விழிப்புணர்வு செயற்பாடொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

0
105

தேவை நாடும் மகளிர் அமைப்பால், ‘கௌரவமான உறவொன்றுக்குள் எவ்வளவு தூரம் பாதுகாப்புடன் இருக்கின்றீர்கள்’ எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பில்
விழிப்புணர்வுச் செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற விழிப்புணர்வுச் செயற்பாட்டின் போது, முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் பொது மக்கள் நடமாடும் இடங்களில் ஸ்ரிக்கர்கள்
ஒட்பட்டதோடு, துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
தேவை நாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு நிலைய முகாமையாளர் சங்கீதா தர்மரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில்,
மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து பிரிவு பொலிஸ்
உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்