தைவான் வழிகளில் விமானங்களை இயக்க வேண்டாம்: சீனா எச்சரிக்கை

0
347

தைவான் வான்வழியை சுற்றியுள்ள ஆறு வழிகளில் விமானங்களை இயக்க வேண்டாம் என ஆசிய நாடுகளுக்கு சீனா எச்சரித்துள்ளது.
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்ஸி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டார். அமெரிக்க உயர் அதிகார பொறுப்பில் உள்ள ஒருவர் தைவான் வருவது 25 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று தைவான் வான்பரப்பில் 27 சீன விமானங்கள் பறந்து சென்றன. மேலும் தைவானை ஓட்டியுள்ள தீவு பகுதியில் இருந்து ராணுவ ஒத்திகை நடத்த இருப்பதால், தைவான் வான்வழியை சுற்றி ஆறு வழிகளை ‘ஆபத்தான பகுதியாக’ அறிவித்த சீனா, இதில் விமானங்களை இயக்க வேண்டாம் என ஆசிய நாடுகளின் விமான நிறுவனங்களுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து தென்கொரியா, தைவானுக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்கள், பாதுகாப்பை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே சீனாவின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத ஜப்பான், வழக்கம்போல தைவானுக்கு விமானத்தை இயக்குவோம் என தெரிவித்துள்ளது. சீனாவின் இத்தகைய நடவடிக்கை காரணமாக தைவான் வான்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.