தொடருந்து இயந்திரம் மற்றும் பயணிகள் பிரயான பகுதிகளை பராமரிப்பதற்கு தேவையான பொருட்கள் இன்மையினால் தொடருந்து சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், தொடருந்து உதிரிப்பாகங்கள் இன்மையினால் 20 தொடருந்து இயந்திரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த 20 தொடருந்துகளும் குறுகிய காலத்திற்கு சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இதேவேளை, தொடருந்து கடவைகளை பராமரிப்பதற்குரிய கற்கள், பலகைகள், தண்டவாளங்கள், ஆணிகள் ஆகியனவற்றுக்கும் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.