நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் டெஸ்போட் கிளார்டன் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நானு ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை பெய்த கடும் மழையின் காரணமாக, இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், மண்மேட்டினை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்