தொடர்ந்து ஒலி எழுப்பும், தாண்டிக்குளம் புகையிரதக் கடவை சமிஞ்ஞை- அச்சத்தில் மக்கள்

0
134

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒலிச் சமிஞ்ஞை, கோளாறு காரணமாக தொடர்ந்து ஒலி எழுப்பி வருவதால், புகையிரதத் கடவையூடாக பயணிப்போர் அச்சமடைந்துள்ளனர். சமிஞ்ஞை விளக்கு தொடர்ச்சியாக இயங்குவதால், வாகனங்களில் வருவோர் புகையிரதம் வருகை தருவதாக நினைத்து நீண்ட நேரம் காத்திருந்து, பின்னர், மிகுந்த அவதானத்துடன் வாகனங்களில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கோளாறை சீர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.