கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களில், இன்று, மேலும் 249 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர் என, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 5 இலட்சத்து 77 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், இன்று மாலை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 6 இலட்சத்து 4 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களைத் தவிர்த்து, தற்பொழுது, 12 ஆயிரத்து 182 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.