இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தான் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் 20 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அவர் ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்ததாகவும் முந்தைய பரீட்சைகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்ததாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பெப்ரவரி 15 ஆம் திகதி ஆண்டுப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் சிறுமி தனது தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதைக் கவனித்த சிறுமியின் தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சிறுமி அடுக்குமாடி குடியிருப்பின் 20 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.