அரசாங்கம் தொழிற்சங்கங்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுமானால் அதற்கு எதிராக அணிதிரள தயாராக இருப்பதாக சுகாதார தொழில்வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
‘ஒன்றிணைவோம்’எனும் தொனிப்பொருளில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ரயில் நிலைய அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தங்களை பலம் மிக்கவர்களாக காட்டுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.
நாம் அரசாங்கத்துடன் மோதுவதற்கு தயாராக இல்லை. எந்த விடயமானாலும் பேச்சுவார்த்தையின் ஊடாகவே தீர்ப்பதற்கு எத்தனிக்கிறோம்.
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சியமைக்கும் அரசாங்கம், நீண்ட காலமாக மக்கள் பலத்துடன் இயங்கிவரும் தொழிற்சங்கங்கள் குறித்து சிந்திக்க வேண்டும்.
எம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டால் அதற்கு எதிராக அனைத் தொழிற்சங்கங்களுடனும் அணிதிரண்டு போராடுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
சுகாதாரத் தொழிற்சங்கங்களே இந்தத் துறையில் இடம்பெற்ற பாரிய மோசடிகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. பாவனைக்கு உதவாத மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டமையை நாம் வெளிப்படுத்தினோம். ஆதலால் தொழிற்சங்கங்களின் முக்கியத்துவம் குறித்து ஆளும் தரப்பு அறிந்துகொள்ள வேண்டும்.