தோல்வியிலிருந்து மீண்டு இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமா சென்னை அணி

0
39

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 25-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர் மோதுகின்றன.5 முறை சம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது.

ஐ.பி.எல் தொடரில் நடந்த ஆரம்ப போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றியோடு ஆரம்பித்த சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.மொத்தத்தில் சரிவில் இருந்து மீண்டு டோனி தலைமையில் இன்றைய போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணி முயற்சிக்குமா என்ற எதிர்பார்ப்பில் இரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.மேலும், இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.