நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரை 7 இலட்சத்து 14 ஆயிரத்து 598 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நாட்டுக்கு வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 எனவும் தற்போதைய சுற்றுலாப் பயணிகளின் வருகையின் படி இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 20 நாட்களில் 89 ஆயிரத்து 724 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.