நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அறிமுக நிகழ்வு

0
72

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் உருவாக்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி இன்று காலை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு சென்னை அருகேயுள்ள பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது.

அங்கு கட்சியின் தலைவர் நடிகர் விஜயால் கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. சிவப்பு மற்றும் மஞ்சள் வர்ணத்தில், இரு யானைகள், வாகை மலருடன் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதி மொழியை நடிகர் விஜய் மேடையில் வாசித்த போது, கட்சி உறுப்பினர்களும் அதனை வழிமொழிந்து உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.