26 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நடிகர் விஜய்யின் கட்சியில் 2 இலட்சம் பேருக்கு பதவி

சினிமாவைத் தொடர்ந்து தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயருடன் அரசியல் பக்கம் சென்றிருக்கிறார் நடிகர் விஜய்.

அரசியலின் ஆரம்பப் புள்ளியை ஆரம்பிக்கும் வகையில், மாணவர்களுக்கு உதவிகளை செய்வதுடன் தமிழகத்தின் நலன் சார்ந்த செயல்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். 

இந்நிலையில், இணையவழி மூலம் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இக்கட்சியில் தற்போது வரை 48 இலட்சம் உறுப்பினர்களாக இணைந்துள்ள நிலையில், 2 இலட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, இளைஞரணி என 30 அணிகளை தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles