நட்டஈடு பெற்றுக் கொண்ட முன்னாள் உறுப்பினர்களின் பட்டியல் அரசாங்கத்திடம்!

0
5

தீப்பரவலுக்கு உள்ளான வீடுகளுக்கான நட்டஈட்டைப் பெற்றுக் கொண்ட பிரதேச சபை மற்றும் நகர சபைகளின் முன்னாள் உறுப்பினர்களின் பட்டியல் அரசாங்கத்திடம் உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் தீப்பரவலுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கான மதிப்பீடுகளை அளவிடும் பணிகளில் ஈடுபட்டிருந்த மாவட்டச் செயலாளர்கள்இ பிரதேச செயலாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் குழு அப்போதைய அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவினால் நாடாளுமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தது.

அதிக நட்டஈடு தொகையைப் பதிவு செய்யுமாறு தங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக சில பிரதேச செயலாளர்கள் அப்போதே குறிப்பிட்டிருந்தனர். அதில் சில பிரதேச சபை மற்றும் நகரசபைகளின் முன்னாள் உறுப்பினர்களின் பட்டியலும் காணப்படுகின்றது. அந்த அடிப்படையில் குறித்த மதிப்பீடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.