நத்தார் தினமான இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கத்தோலிக்க கைதிகளுக்கு மாத்திரம் பார்வையாளர்களை சந்திப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, கத்தோலிக்கர்களின் நத்தார் சிறப்பு தினமாக கருதி, வருகையாளர்களுக்கு முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும், கைதிகளின் உறவினர்கள் கொண்டுவரும் உணவுகளை அவ்வாறே கொண்டு வருமாறும் ஒரு கைதிக்கு மட்டும் போதுமான உணவை எடுத்து வருமாறும் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்