நத்தார் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை : ரஷ்யா அறிவிப்பு

0
131

தொடர்ச்சியாக போர் இடம்பெற்று வரும் நிலையில், நத்தார் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை என, ரஷ்யா தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், ஐரோப்பாவில் மிகப் பெரிய போராக, ரஷ்யா – உக்ரைன் போர் கருத்தப்படுகின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் போர் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக, நத்தார் பண்டிகைக்குள், ரஷ்யா, படைகளை திரும்ப பெறும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என, உக்ரைன் ஜனாதிபதி, கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில், போர் நிறுத்தத்திற்கான எந்த திட்டமும் இதுவரை இல்லை என, ரஷ்ய ஜனாதிபதி அலுவலக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அறிவித்துள்ளார்.