நத்தார் தினத்தையொட்டி இடம்பெறவுள்ள விசேட திருப்பலி ஆராதனைகளின் போது, தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு, பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். தேவாலயங்களின் அருட்தந்தையர்களை சந்தித்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ள பொலிஸ்மா அதிபர், தேவாலயங்களில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடன் சந்தேகத்துக்கிடமானோரை அடையாளங்காண நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.